dmdk to get 4 seats in Lok Sabha Election 2019

திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.