மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 400 பேர் பங்கு கொண்டனர் அதிலிருந்து அக்கட்சி நான்கு பேரை தேர்வு செய்ய உள்ளது. விஜயகாந்த் நிலை கண்டு அக்கட்சியினர் வேதனை அடைந்தனர். விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
DMDK-AIADMK alliances
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.