MLA Karunas:முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் கொள்கை தனித்துப் போட்டியிடுவதே. ஆனால் தற்போதைய அதிமுகவினர் அதனை மறந்து பாஜக பாமக உடன் கூட்டணி அமைத்திருப்பது, ஜெ.வின் ஆன்மா கூட அவர்களை மன்னிக்காது என விமர்சித்துள்ளார் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.
Deputy Chief Minister OPS
AIADMK News in Tamil- இலை கட்சியில் சலசலப்பு
மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு தம்பிதுரை கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோருக்கும் அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை எனவும் கூட்டணி அமைந்தால் எங்கள் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே அரசிற்கு பெருமான்மை இல்லாத நிலையில் ஆதரவை திரும்ப பெறுவோம் என அவர்கள் கூறியிருபப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
AIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்
சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி, அதிமுக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பினார். அப்போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என கூறினார். மேலும் 1967 முதல் காங்கிரஸ் அதிமுக,திமுக மீது தான் சவாரி செய்து வருகிறது என விமர்சித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள் ”இது போன்ற கருத்துகள் எழுவது பெரிதல்ல, எந்த கட்சியும் தனித்து நிற்கும் சூழல் இன்று இல்லை”.