EPFO: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி வழங்க இ.பி.எப் நிறுவனத்தின் அறங்காவலர் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர் எனக் குறிப்பிட்டார். இந்த ஒப்புதலை மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
Current Affairs
Pulwama Attack: இதயத்தில் நெருப்பு எரிகிறது பிரதமர் ஆவேசம்
Pulwama Terror Attack: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அண்மையில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, என் இதயத்தில் நெருப்பு எறிவதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் பாமர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா
Pulwama Attack: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.