நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.
விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.