Chief Minister

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்காக, நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, அமல்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.

வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கம் 3 பேருக்கு அறிவிப்பு!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்தசிறுவன் சூரியகுமார், போடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்களை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதை வழங்குகிறார்.

சென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். வர்த்தக மையத்தில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுள்ளன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் தலைமையில் இன்று நடைபெறுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கோரியுள்ள நிறுவனங்கள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.