chennai

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

மெரினாவில் குளிப்பதற்கு வயது வரம்பு 18

மெரினா கடற்கரையில் குளிப்பதற்கு வயது வரம்பு 18 என நிர்ணையிக்க பட்டுள்ளதாக சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மெரினாவை நோக்கி மக்கள் தஞ்சம் அடைகிறார்கள், அப்போது அசம்பாவிதகங்களை தவிர்க்கும் வகையில் இதனை நடைமுறை படுத்தவுள்ளனர். அதனையும் மீறி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளித்தால் அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம்

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் அமைக்க தடை கோரி, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தள்ளுபடி செய்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிபதிகள், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

சென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். வர்த்தக மையத்தில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுள்ளன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளை போன்று சென்னையிலும் நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் பார்க்கிங் முறை

போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஓரங்களில் முறையின்றி நிறுத்திவிட்டுச்செல்லும் வாகனங்களும் பிரதான காரணமாக உள்ளது என்பதை கண்டறிந்த அதிகாரிகள், நீண்ட கால திட்டமிடலுக்கு பின் சென்னை முழுவதும் சாலைகளில் வாகன நிறுத்தத்தை முறைபடுத்த, டிஜிட்டல் பார்க்கிங் முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த சேவையை பயண்படுத்த விரும்பும் பொதுமக்கள், தங்களுடைய ஸ்மார்ட் போனில் GCC SMART PARKING என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களுடன் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.