புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளை குறிவைப்பது வேதனையளிப்பதாக என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேசியுள்ளார். உலகக் கோப்பை அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.
BCCI
மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்
IPL 2019: மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் இம்முறை வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்தி வலம் வந்தது. அது சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. அந்த வகையில் மீண்டும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது என்ற தகவலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
IPL 2019 News in Tamil: இந்த ஆண்டு IPL போட்டிகள் அரபு நாட்டில் நடக்க போகிறதா?
இந்த ஆண்டு IPL தொடரின் இறுதி போட்டி சென்னையில் நடக்கும் என்று கிளம்பிய வதந்தியை பற்றி விளக்கியுள்ள BCCI, “இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே போட்டியை எங்கு எப்போது நடத்துவது என்று தீர்மானிக்கப்படும். தேர்தலை பொறுத்து சில போட்டிகள் இந்தியாவிலும் சில போட்டிகள் அரபு நாட்டிலும் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சென்னையில் இறுதி போட்டி என்கின்ற வதந்தியை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளது.
கடைசி 2 ஒருநாள்; டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ
நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கவும், அவருக்கு பதிலாக இந்திய அணியை துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகள் இடையே நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.