Australian Open Tennis

நம்பர் ஒன் டென்னிஸ் வீரரிடமே அடையாள அட்டை கேட்ட பாதுகாவலருக்கு குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரின் போது தனது அடையாள அட்டையை காண்பிக்காத்தால் ரோஜர் ஃபெடரர் பாதுகாவலர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது குறித்த வீடியோவை, ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதில், “ரோஜர் ஃபெடரெருக்கும் அடையாள அட்டை தேவை” என்று குறிப்பிட்டுள்ளது. யாராக இருந்தாலும், அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்புடன் கடைபிடித்த காவலருக்கும், அதற்கு மதிப்பளித்த பெடரெருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முரே

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆண்டி முரே, ரோபார்ட்டோ பேடிஸ்டாவிடம் போராடி தோல்வி அடைந்தார். இதையடுத்து டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆண்டி முரே இனிமேல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க போவது இல்லை என்றும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆண்டி முரேவுக்கு பிரபல வீரர்கள், ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவோக் ஜோக்கோவிச் உள்ளிட்டோரும் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.