Australian Open

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பெட்ரோ கிவிட்டோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரோ கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். கிவிட்டோவா இறுதிப் போட்டியில் செக்குடியரசு பிளிஸ்கோவா அல்லது ஜப்பான் ஒசாகாவுடன் மோதுவார்.

நம்பர் ஒன் டென்னிஸ் வீரரிடமே அடையாள அட்டை கேட்ட பாதுகாவலருக்கு குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரின் போது தனது அடையாள அட்டையை காண்பிக்காத்தால் ரோஜர் ஃபெடரர் பாதுகாவலர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது குறித்த வீடியோவை, ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதில், “ரோஜர் ஃபெடரெருக்கும் அடையாள அட்டை தேவை” என்று குறிப்பிட்டுள்ளது. யாராக இருந்தாலும், அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்புடன் கடைபிடித்த காவலருக்கும், அதற்கு மதிப்பளித்த பெடரெருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் நடப்புச் சாம்பியனை வீழ்த்தினார் மரியா ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனான கரோலின் ஓஸ்னியாக்கியை மரிய சரபோவா வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் ஓஸ்னியாக்கி, ரஷ்யாவின் மரிய சரபோவா ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 6-3என்கிற செட் கணக்கில் மரிய சரபோவா கரோலின் ஓஸ்னியாக்கியை வீழ்த்தினார்.