Banner | Shree Raaja Lakshmi Films |
Cast | Anjali, Mammootty, Sadhana, Anjali Ameer |
Direction | Ram |
Lyrics | Na Muthukumar |
Music | Yuvan Shankar Raja |
Production | Shree Raaja Lakshmi Films |
Peranbu Tamil Movie Review: இயக்குனர் ராம் இயக்கத்தில் பி.எல் தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் நாளை (01.02.2019) வெளியாகவுள்ளது.
Peranbu Tamil Movie Review – பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்
இப்படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்…
துபாயில் வேலை செய்து வரும் மம்மூட்டிக்கு மகள் பிறந்திருப்பதாகவும், ஆனால் மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மகள் இப்படி மாற்று திறனாளியாக பிறந்து உள்ளதால், அவர் மகளை கூட பார்க்க வராமல் இருந்து விடுகிறார். இதனால், மம்மூட்டியின் மனைவியே குழந்தையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர், இனியும் என்னால் குழந்தையை பார்த்து கொள்ள முடியாது என்று மம்மூட்டியிடம் கூறி விட்டு வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார். இதனால் மம்மூட்டி தன்னுடைய மகளுக்காக வாழ தொடங்குகிறார். மாற்று திறனாளியாக இருக்கும் மகளுக்கு ஏற்படும் ஆசைகளை மம்மூட்டி எப்படி நிறைவு செய்கிறார்? இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே இப்படத்தின் மீதி கதை.
Peranbu Tamil Movie Review – பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்
படத்தில், நடிகர் மம்மூட்டி மாற்று திறனாளி பெண்ணின் அப்பாவாகவே வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க மீன்கள் படத்திற்கு பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் நடித்துள்ள சாதனா, தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படத்திலும், ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.
Peranbu Tamil Movie Review – பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்
இப்படத்திற்கு மிக பெரிய பலமே யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான். காட்சிகளை விட இப்படத்தின் இசையே கதையை வெளிப்படுத்துகிறது என்பதே உண்மை. சூர்யா பிரதமனின் எடிட்டிங், தேனீஸ்வரின் ஒளிப்பதிவு என இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
Tamil Movie Review: Peranbu Tamil Movie Review – பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்
பேரன்பு தமிழ் சினிமா ரேட்டிங் – 4/5