AMMK

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

  1. குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
  2. ஆம்பூர் – பாலசுப்பிரமணி
  3. அரூர் – முருகன்
  4. மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
  5. சாத்தூர் – சுப்பிரமணியன்
  6. பரமக்குடி – முத்தையா
  7. பூவிருந்தவல்லி – ஏழுமலை
  8. பெரம்பூர் – வெற்றிவேல்
  9. திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி

மக்களவை வேட்பாளர் பட்டியல்

  1. கரூர் – தங்கவேல்
  2. பெரம்பலூர் – ராஜசேகரன்
  3. சிதம்பரம் – இளவரசன்
  4. மயிலாடுதுறை – செந்தமிழன்
  5. நாகை – செங்கொடி
  6. தஞ்சை – முருகேசன்
  7. சிவகங்கை – பாண்டி
  8. காஞ்சிபுரம் – முனுசாமி
  9. விழுப்புரம் – கணபதி
  10. சேலம் – செல்வம்
  11. நாமக்கல் – சாமிநாதன்
  12. ஈரோடு-செந்தில்குமார்
  13. திருப்பூர்-செல்வம்
  14. நீலகிரி – ராமசாமி
  15. கோவை – அப்பாதுரை
  16. பொள்ளாச்சி – முத்துக்குமார்
  17. திருவள்ளூர்-பொன். ராஜா,தென்
  18. சென்னை-இசக்கி சுப்பையா
  19. ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன்
  20. மதுரை – டேவிட் அண்ணாதுரை
  21. ராமநாதபுரம் – ஆனந்த்
  22. தென்காசி – பொன்னுத்தாய்
  23. திருநெல்வேலி – ஞான அருள்மணி
  24. திருச்சி – சாருபாலா தொண்டைமான்
  25. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீதம் உள்ளவர்களின் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்படும்.

வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன்

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அமமுக மூத்த நிர்வாகிகளும் டிடிவி தினகரன் அவர்களும் ஆலோசித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவின் கருத்துக்களை கேட்டறிய பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை சென்று சந்தித்தனர். பின்பு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் மிக விரைவில் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும், என்றார்.

வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுகிறார் தினகரன்

AMMK: நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமமுக ஆலோசனை கூட்டம் அக்கட்சி துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் எந்த முடிவும் எட்டப்படாததால் கூட்டணிக்கு வருவதை தவிர்த்துவிட்டன. மேலும் 18 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குக்கர் சின்னத்தை பெறுவோம் டிடிவி தினகரன் நம்பிக்கை

AMMK: நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினகரன் செய்தியாளர் சந்திப்பு

சற்றுமுன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 38 தொகுதியில் அமுமுக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் பாமக மற்றும் திமுக உடன் கூட்டணி கிடையாது என்றும், கூட்டணி பற்றிய விவரங்களை வரும் 28ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றார். பாமக, திமுகவும் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் எனக் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி – ராம்தாஸ் அத்வாலே பேட்டி

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.