Banner | Prince Pictures |
Cast | Karthi, Rahul Preet Singh, Prakash Raj |
Direction | Rajath Ravishanker |
Production | Prince Pictures |
Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் திரைப்படம் படம் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.
கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள தேவ் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
பணம் மட்டுமே வாழ்கை அல்ல, அன்பு காட்ட ஆள் இல்லேனா அது வாழ்கையே இல்லை என்பதே படத்தின் கதை. intouchables படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகன் தேவ்(கார்த்தி) வாழ்க்கையில் ரொம்ப ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இவரது தந்தை ராமலிங்கம் (பிரகாஷ்ராஜ்) பெரிய பணக்காரர். இந்த படம் 2 மணிநேரம் 40 நிமிடம் நேரம் பயணிக்கிறது.
Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்
வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணும், தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு பெண்ணும் சந்திக்கும் படமே ’தேவ்’ படத்தின் கதையாகும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் பலராலும் வரவேற்பு பெற்றுள்ளது. இசைக்கு ஏற்றவாறு படத்தின் பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்த தேவ் ஒரு அட்வென்சர் படமா? உண்மையில் இல்லை. படத்தில் நாயகன் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறுகிறார் அதுமட்டுமே. இல்லை இது ரொமாண்டிக் படமா? அதுவும் இல்லை.
Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்
படத்தின் நாயகன் ‘தேவ்’ மற்றும் நாயகி மேக்னா இடையே ரொமான்ஸ் பேஸ்புக் வழியாக தொடங்குகிறது. இது ஒரு உறவுகளுக்கான டிராமாவா? இல்லை. நாயகன் குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளது. இது ஆக்ஷன் படமா? அப்படி இருந்தாலும் படத்தில் சில சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளன.
இந்த படத்தில் பல கேரக்டர்கள் நடித்திருந்தாலும் அவர்கள் நடித்ததற்கான காரணமே தெரியவில்லை. இருந்தாலும், படத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன் சிறப்பாக நடித்துள்ளனர். பல்வேறு லொக்கேஷன்களில் சூட்டிங் செய்யப்பட்டிருந்தாலும், அவை எதுவும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை.
படத்தின் கேரக்டர்களுக்கு ஸ்போர்ட்ஸ் விளையாட்டு காஸ்டியூம்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை நடிகர்களுக்கு பெரிய பெர்சனாலிட்டியை கொடுக்கவில்லை. படத்தில் ஏகபட்ட டயலாக்கள் அதில் ஒரு லைன் கூட மனதில் நிற்கவில்லை.
இது நல்ல படம் என்ற நினைக்க வைக்கும் வகையில், ரிச்சார்ட் முதல் வேட்டையாடுதல் காட்சி மற்றும் கொலை செய்தல் காட்சி, சிறுமியை வைத்து சிறியளவிலான டிராமா போன்ற காட்சிகளே படத்தில் உள்ளன. ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங் கொடுத்த பணியை சரியாக செய்துள்ளார்.
படத்திற்கு பாடல்கள் பக்க பலம் தான் என்றாலும், படத்தோடு பார்க்கும் போது அவை சற்று ஸ்பீடுபிரேக்கர் போல உணரச் செய்கின்றன. அதேபோல படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை.
Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்
“தேவ்” படத்தில் ஒரு கட்டத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் கார்த்தி, சறுக்கல்களை சந்திக்கிறார். அதேபோல தேவ் படமும் பல இடங்களில் பார்வையாளர்களிடம் சறுக்கி விடுகிறது. எனினும் படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பான ஒளிப்பதிவு தேவ் படத்திற்கு வலு சேர்த்து விடுகிறது.
இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கார்த்தி பட வரிசையில் காஷ்மோரா படத்துக்குப் பிறகு இந்த படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டதாகும்.
மொத்தத்தில் இந்த படம் ஒரு முறை பார்கலாம் என்ற ரகமே.
Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்
கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா ரேட்டிங் – 1.5/5