AAP Delhi Breaking News:எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மோடி அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகி விட்டது
சில மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்கட்சிகளையும் கூட்டி பொதுக்கூட்டம் ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார்.
அதையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜீ 22 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தானும் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த போவதாக கூறினார்.
அதன்படி டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மம்தாவின் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க எம் பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ம.ஜ.த தேசிய தலைவர் தேவ கவுடா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance
காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மம்தா பானர்ஜீ பேசுகையில், “பா ஜ க ஆட்சியில் டெமோகிரசி மோடிகிரசி ஆகிவிட்டது. இன்று தான் மக்களவையில் மோடிக்கு கடைசி நாள். இன்னும் 20 நாட்கள் தான்; அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேற்கு வங்கத்தில் என்ன முயற்சிகள் செய்தாலும் மோடி அரசு கால்பதிக்க முடியாது. அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெல்லும்.
கண்ணாடியில் உங்களையே பாருங்கள்; ராவணனுக்கும் 56 இன்ச் மார்பு தான் இருந்தது. ஷோலே திரைப்படத்தில் தூங்கிவிடு இல்லை என்றால் கஃபர் சிங்க் வந்துவிடுவான் என்றொரு வசனம் உண்டு. இந்தியாவிற்கு மோடி தான் கஃபர் சிங். அவரை வைத்து தான் அந்த வசனம் ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தற்பொழுது சொல்லப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance
அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ மோடி ஜி நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாகிஸ்தானிற்கு அல்ல. எந்த இந்திய பிரதமராவது டெல்லியையும் கொல்கத்தாவையும் பாதிப்பிற்குள்ளாக்க நினைப்பாரா?” என்று கூறினார்.
பரூக் அப்துல்லா பேசுகையில், “கடவுள் ராமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கு மட்டும் தான் சொந்தமானவரா? அவர் அனைவருக்கும் பொதுவானவர். உங்கள் மறைவிற்கு பின் நீங்கள் அவரிடம் செல்லும் பொழுது அவர் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மோடி அரசுக்கு எதிராக இவ்வாறு எதிர்க்கட்சிகள் கை கோர்த்திருப்பது பா ஜ க அரசிற்கு சருக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், ரபேல் விமான கொள்முதல், விவசாயிகள் பிரச்சனை என எதிர்க்கட்சிகளின் வாயில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மோடி அரசுக்கு இது இன்னொரு பாரமே