இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.
3rd ODI
3-வது ஒருநாள் போட்டி: 18 ஓவரில் 80/1 ரன்களை இந்தியா
இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோலி 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டைலர் 93 ரன்கள் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல், பாண்டேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி: நியூசிலாந்து 35 ஓவர் முடிவில் 160/3
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 35 ஓவர்களில் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ரோஸ் டைலர் 64 ரன்களுடனும், டாம் லேத்தம் 40 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், முஹமத் சமி, யுவேந்திரா சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.