தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. கடந்த 22ம் தேதி தொடங்கிய இவர்களது போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் அந்த பணியிடத்தில் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.