2019 – 20ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார. தமிழக துணைமுதல்வரும், நிதியமைச்சருமான பன்னீா் செல்வம் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
மக்களவைத் தேர்தல் News in Tamil
தேமுதிக கூட்டணி அமைக்கும் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் பேட்டி
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் எனவும் சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து எதிர்கொள்வதாக நாங்கள் முடிவு செயதுள்ளோம் என்றும் அவர் கூறினார். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும், நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு
பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.
நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேர்தலில் போட்டியிடுவதற்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் கோரிக்கைகளை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் வழங்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்
தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.
ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:
பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:
துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.
தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,
அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு
பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ ” தேர்தல் பிரசாரம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் அரசு விழாவில் மோடி பங்குகொள்ளவது ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த ஒரு பிரதமரை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் கருப்பு கொடி காட்ட வைகோ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.