மக்களவைத் தேர்தல் நடைபெறும் அன்றே பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அது பெரிய விஷயம் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடங்கியதா? ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல்
மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-நாகை எல்லை காணூரில் நிரந்தர செக்ஸ்போஸ்ட்டில் நேற்று காலை போலீசார் வாகனங்களில் தீவிர சோதனையிட்டனர். அப்போது கார் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல்லை – தென்காசி சாலை அத்தியூத்தில் நடந்த சோதனையில் நெல்லையில் இருந்து வந்த காரில் ரூ.20 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.