February 3, 2019
ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
6 years ago

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது