Krishnasamy

டாக்டர். கிருஷ்ணசாமி
நிறுவன தலைவர் - புதிய தமிழகம் கட்சி
முழுப் பெயர்டாக்டர். கிருஷ்ணசாமி
பிறந்த தேதிஏப்ரல் 3 1952 (வயது 66)
பிறந்த இடம்உடுமலைப்பேட்டை
கட்சி பெயர்புதிய தமிழகம்
கல்விமருத்துவ பட்டப்படிப்பு
தொழில்அரசியல் – மருத்துவம்
தந்தை பெயர்கருப்பசாமி
தாயார் பெயர்தாமரை அம்மாள்
துணைவியார் பெயர்சந்திரிக்கா

கிருஷ்ணசாமி ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்களுக்காக வாதாடியவர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 ஜூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

இவர் 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார். தேவேந்திர குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.