Vaiko

வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்
முழுப் பெயர்வை.கோபால்சாமி
பிறந்த தேதிமே 22, 1944(அகவை 74)
பிறந்த இடம்கலிங்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்
கட்சி பெயர்மதிமுக
கல்விமுதுகலை மற்றும் சட்ட இளங்கலை
தொழில்அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தந்தை பெயர்வையாபுரி
தாயார் பெயர்மாரியம்மாள்
துணைவியார் பெயர்ரேணுகாதேவி

வை கோ பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி – மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.