Kamal Haasan
முழுப் பெயர் | கமல்ஹாசன் |
பிறந்த தேதி | 07 Nov 1954 (வயது 64) |
பிறந்த இடம் | இராமநாதபுரம், தமிழ்நாடு |
கட்சி பெயர் | மக்கள் நீதி மய்யம் |
கல்வி | பள்ளி படிப்பு |
தொழில் | திரைப்பட நடிகர் |
தந்தை பெயர் | டி.சீனிவாசன் |
தாயார் பெயர் | ராஜலட்சுமி |
துணைவியார் பெயர் | --------- |
கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார். இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாடமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு நாத்திகர் ஆவார். 2018 பிப்ரவரியில் தனது கட்சி மற்றும் அதன் வழிகாட்டு கொள்கைகளை அறிவித்த கமல், தன்னுடைய அரசியல் அபிலாஷைகளை உண்மையாக்க இனி நடிக்கபோவதில்லை என அறிவித்தார். தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றை “பவர் ப்ரோக்கர்கள்” என விமர்சித்த கமல், அவர்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். தனது அரசியல் கட்சி மூலம் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார். இது அவரது கட்சிக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெற்றிகரமான நடிகர்களாக இருந்து அரசியல்வாதியாக மாறிய எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா ஆகியோரையும், வெற்றிகரமான நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்ற சிலரையும் தமிழ்நாடு பார்த்துள்ளது. எனினும் கமல்ஹாசன் தனது அரசியல் முயற்சியில் இதேபோன்ற வெற்றியை பெற முடியுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த சாதனையை அடைவதற்காக அவர் பிப்ரவரி 2018ல் மக்கள் நீதி மய்யம்(MNM)என்ற அரசியல் கட்சியை நிறுவினார். அக்கட்சி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளது.