Kanimozhi
மு. க. கனிமொழி
மாநிலங்களவை உறுப்பினர் - திராவிட முன்னேற்றக் கழகம்
முழுப் பெயர் | மு. க. கனிமொழி |
பிறந்த தேதி | 5 January 1968 (age 51 years) |
பிறந்த இடம் | சென்னை |
கட்சி பெயர் | திராவிட முன்னேற்றக் கழகம் |
கல்வி | Graduate |
தொழில் | அரசியல் |
தந்தை பெயர் | மு. கருணாநிதி |
தாயார் பெயர் | ராஜாத்தி அம்மாள் |
கணவர் பெயர் | அரவிந்தன் |
கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. தற்போது, இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.. இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில்பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.