Durai Murugan

துரைமுருகன்
திராவிட முன்னேற்றக் கழகம் - பொருளாளர்
முழுப் பெயர்துரைமுருகன்
பிறந்த தேதி01 Jul 1938 (வயது 80)
பிறந்த இடம்காட்பாடி
கட்சி பெயர்திராவிட முன்னேற்ற கழகம்
கல்விPost Graduate
தொழில்அரசியல்வாதி
தந்தை பெயர்திரு. துரைசாமி
தாயார் பெயர்தவசி அம்மாள்
துணைவியார் பெயர்சாந்தாகுமாரி

துரைமுருகன் , வேலூர் மாவட்டத்திலுள்ள காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தமிழக அரசியல்வாதியும் மற்றும் வழக்குரைஞரும் ஆவார். திமுக பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது நகைச்சுவையான கருத்க்துகள், சைகைகள், முகபாவனைகளால் அனல்பறக்கும் விவாதங்களில் கூட சட்டசபையை கலகலப்பாக மாற்றிவிடும் வல்லமை உடையவர். இவரது நலம்விரும்பியாக இருந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மெட்ராஸில் துரைமுருகனின் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து 6 வருட( 2வது & 3வது ஆண்டு பி.ஏ, 2 ஆண்டு சட்டபடிப்பு, 2ஆண்டு எம்.ஏ) படிப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.