Vijayakanth

விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - தலைவர்
முழுப் பெயர்விஜயகாந்த்
பிறந்த தேதி25 Aug 1952 (வயது 66)
பிறந்த இடம்திருமங்கலம், மதுரை
கட்சி பெயர்தேசிய முற்போக்கு திராவிட கழகம்
கல்வி10th Pass
தொழில்அரசியல்வாதி மற்றும் நடிகர்
தந்தை பெயர்கே.என்.அழகர்சாமி நாயுடு
தாயார் பெயர்ஆண்டாள் அழகர்சாமி
துணைவியார் பெயர்பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர். இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார். சில தமிழ் திரைப்படங்களை தாமே இயக்கி நடித்துள்ளார் விஜயகாந்த். 14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார்.

2016:
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்

2011:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

2006:
10 மே 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். 2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2005:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் துவங்கினார்.