Subramanian Swamy

சுப்ரமணியன்சாமி
மாநிலங்களவை உறுப்பினர் - பிஜேபி
முழுப் பெயர்சுப்ரமணியன்சாமி
பிறந்த தேதி15 Sep 1939 (வயது 79)
பிறந்த இடம்மயிலாப்பூர், சென்னை
கட்சி பெயர்பிஜேபி
கல்விDoctorate
தொழில்போராசிரியர், கல்வியாளர், பொருளாதார வல்லுநர்
தந்தை பெயர்சீதாராமன் சுப்ரமணியன்
தாயார் பெயர்பத்மாவதி
துணைவியார் பெயர்ரொக்சனா சுவாமி

பொருளாதார மற்றும் புள்ளியியல் வல்லுநரும், இந்திய அரசியல்வாதியான டாக்டர். சுப்ரமணியன்சாமி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் திட்டக்குழு உறுப்பினராகவும், சந்திரசேகர் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, அக்கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முன்பு 1990 முதல் 2013 வரை அதன் தலைவராக இருந்தார்.

இவர் 1974 முதல் 1999 வரை மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாபெரும் 2ஜி அலைகற்றை ஊழலை வெளிப்படுத்தியதில் முக்கிய காரணியாக இருந்தார் சுப்பிரமணியசாமி. உலகின் மிகவும் கடினமான மொழியான சீன மொழியை ஓராண்டிற்குள் கற்க வேண்டும் என்ற சாவலை ஏற்று, வெறும் 3 மாதங்களில் அதை முடித்து தனது திறமையை மெய்பித்தார். இந்து வம்சாவளியில் இருந்து வந்ததாக இசுலாமியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனில் அவர்களின் வாக்குரிமையை பறிக்க சுப்பிரமணியசாமி பரிந்துரைத்ததால், அவர் கற்பித்த 2 பொருளாதார பாடங்களை பாடத்திட்டத்தில் இருந்து ஹார்வர்டு பல்கலைகழக நீக்கியதன் காரணமாக அப்பல்கலைகழகத்தை விட்டு வெறியேறினார் சாமி.

சட்டத்துறையில் சாமி பயிற்சிபெற முக்கிய பங்காற்றினார் அவரது மனைவி ரோக்ஸான்னா. கொச்சியில் உள்ள ஸ்கூல் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்-ன் சேர்மேனாக உள்ள சுப்பிரமணியசாமி, 1963ல் ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வல்லுநராகவும், 1986ல் உலகவங்கியின் ஆலோசகராகவும் இருந்தார்.