Thambi Durai

தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர் - அஇஅதிமுக
முழுப் பெயர்தம்பிதுரை
பிறந்த தேதி15 Mar 1947 (வயது 72)
பிறந்த இடம்சிந்தாகம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம்,தமிழ்நாடு
கட்சி பெயர்அதிமுக
கல்விமுனைவர் பட்டம் பெற்றவர்
தொழில்அரசியல்வாதி
தந்தை பெயர்திரு. முனிசாமி கௌண்டர்
தாயார் பெயர்கமலம்மாள்
துணைவியார் பெயர்பானுமதி தம்பிதுரை

தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரான டாக்டர். தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர். தமிழகத்தின் கரூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான தம்பிதுரை தற்போது மக்களவை துணை சபாநாயகராக பணியாற்றிவருகிறார். மத்திய சட்டம்,நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராகவும், மத்திய தரைவழி போக்குவரத்து துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராகவும் மார்ச் 1998 முதல் ஏப்ரல்1999 வரை இருந்துள்ளார். 1985 முதல் 1989 வரை மக்களவை துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

தனது 18வது வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கிய தம்பிதுரை, அப்போதைய ஒருங்கிணைந்த திமுகவின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் 1965ல் இருந்துள்ளார். எம்ஜிஆர்-ன் தீவிர இரசிகரான இவர், சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆங்கிலப்புலமையால்ஆர்.எம்.வீரப்பனின் உதவியுடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றார்.