March 13, 2019
தொடங்கியது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் படபிடிப்பு
6 years ago

இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இரும்புத்திரை படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கிய நடிகர் அர்ஜுன் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாக்க உள்ள இந்த படத்தில் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என்று பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.