February 6, 2019
நயன்தாராவின் ஐரா படத்தின் மெலோடி பாடல் “மேகதூதம் பாடவேண்டும்”
6 years ago

லக்ஷ்மி மற்றும் மா குறும்படங்கள் புகழ் சர்ஜுன் இயக்கி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ஐரா திரைப்படத்திலிருந்து மேகதூதம் என்னும் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலுக்கு தாமரை வரிகள் எழுதியுள்ளார். சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.