March 13, 2019
கார்த்தி நடிப்பில் பட பூஜையுடன் தொடங்கியது ‘கார்த்தி 19’
6 years ago

தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடந்து வரும் நடிகர் கார்த்தி, ‘கார்த்தி 19’ என்ற அழைக்கப்படும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அதிக பொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா என்ற நடிகை தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.