Business News

திவாலாகிறது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ஜியோவின் அறிமுகத்தால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரும் சரிவை கண்டது. இதனால் அந்நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம் தங்களுக்கு சேர வேண்டிய 550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவாலானதாக அறிவிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உயர்வுடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகள்; ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72.16 புள்ளிகள் உயர்ந்து 36,393.45 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 24.50 புள்ளிகள் உயர்ந்து 10,914.80-ஆகவும் வர்த்தகமாகின. இதேபோன்று ரூபாயின் மதிப்பும் உயுர்வுடன் ஆரம்பமாகின. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.71.15 இருந்தது. காலை 11 மணியளவில் 5 காசுகள் சரிந்து ரூ.71.30 வர்த்தகமானது.