S Peter Alphonse
முழுப் பெயர் | பீட்டர் அல்போன்ஸ் |
பிறந்த தேதி | ---------- |
பிறந்த இடம் | ---------- |
கட்சி பெயர் | காங்கிரஸ் |
கல்வி | ---------- |
தொழில் | ---------- |
தந்தை பெயர் | ---------- |
தாயார் பெயர் | ---------- |
துணைவியார் பெயர் | ---------- |
எஸ். பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் தமிழக காங்கிரசின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அவருடன் இவரும் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறினார். 2006 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸில் இருந்து ஜி. கே. மூப்பனார் பிரிந்தபோது அவரது தமிழ் மாநில காங்கிரஸில் பீட்டர் அல்போன்ஸ் இணைந்து பணியாற்றினார். அப்போது மூப்பனாரின் வலதுகரமாக செயல்பட்டவர். மூப்பனாரின் இறப்புக்குப்பின் அவரது மகன் ஜி.கே. வாசனுடன் இணைந்து பணியாற்றினார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் ஜி.கே.வாசன் உறுதியான முடிவை எடுக்கத் தவறியதால் பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்.