R Sarathkumar

சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்
முழுப் பெயர்சரத்குமார்
பிறந்த தேதி14 July 1954 (வயது 64)
பிறந்த இடம்புது தில்லி
கட்சி பெயர்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
கல்விGraduate
தொழில்சினிமா
தந்தை பெயர்எம். இராமநாதன்
தாயார் பெயர்புஷ்பலீலா
துணைவியார் பெயர்ராதிகா

சரத்குமார்,(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார். அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார்.