M K Stalin
முழுப் பெயர் | மு.க.ஸ்டாலின் |
பிறந்த தேதி | 01 Mar 1953 (வயது 66) |
பிறந்த இடம் | சென்னை |
கட்சி பெயர் | திராவிட முன்னேற்ற கழகம் |
கல்வி | Graduate |
தொழில் | சமூகசேவை, அரசியல் |
தந்தை பெயர் | மு. கருணாநிதி |
தாயார் பெயர் | தயாளு அம்மாள் |
துணைவியார் பெயர் | துர்கா ஸ்டாலின் |
மு.க.ஸ்டாலின் என பரவலாக அறியப்படும் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் மு.கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கும் 1 மார்ச் 1953ல் மூன்றாவது மகனாக பிறந்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். தற்போது திமுகவின் தலைவராக உள்ளார் தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.