Kushboo

குஷ்பு
காங்கிரஸ் செய்திதொடர்பாளர்
முழுப் பெயர்குஷ்பு
பிறந்த தேதி29 செப்டம்பர், 1970
பிறந்த இடம்மகாராஷ்டிரா
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்வி
தொழில்அரசியல், நடிகை
தந்தை பெயர்
தாயார் பெயர்
கணவர் பெயர்சுந்தர் சி

2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.