மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

AIADMK-Thambidurai

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?