பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்
தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.
ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:
பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:
துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP
பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.
தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,
அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.